வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்

வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்
அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், நறுமணப் பொருட்கள், ஊறுகாய், பான வகைகள், இனிப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்கள் இங்கே கிடைக்கின்றன.

தொலைபேசியில் ஆர்கானிக் பொருட்கள் ஆர்டர் கொடுக்க -9790044225ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, 27 January 2017

இந்திய பணக்காரர்களில் நான்கில் ஒரு பங்கு மார்வாடிகள்..!

இந்திய பணக்காரர்களில் நான்கில் ஒரு பங்கு மார்வாடிகள்..!

மார்வாடி மக்கள் இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த மார்வார் மக்கள் ஆவர். வறண்ட பாலைவனப் பகுதியைச் சேர்ந்த மார்வாடிகள் வணிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள், வளங்களைச் சிக்கனமாகச் சேமித்து வாழத் தெரிந்தவர்கள். இதனால் தான் மார்வாடிகளால் வணிக உலகில் விஸ்வரூபம் எடுக்க முடிந்தது.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் இந்திய பில்லியனர்களில் நான்கில் ஒரு பங்கு மார்வாடிகளே உள்ளனர். இவர்கள் கை வைக்காத தொழில் துறைகளும் இல்லை பதிக்காத முத்திரையும் இல்லை என்று சொல்லலாம். மார்வாடிகளின் ஆதிக்கத்தில் தான் இந்திய வணிகமே உள்ளது என்று கூடக் கூறலாம்.
மிகுந்த வறியவனாய் வந்த ஒரு மார்வாடி எவ்வாறு செல்வந்தன் ஆகிறான் என்பதை, ஆசிரியர் தாமஸ் டிம்பெர்க், "The Marwaris: From Jagat Seth to the Birlas" என்ற நூல் மூலமாக ஏழு ரகசியங்களை 50 ஆண்டுகளாக ஆராய்ந்து எழுதி உள்ளார்.
அவை என்னென்ன என்பதை நாமும் அறிந்து வணிகத்தில் வெற்றி பெறுவோம்.
1. பணத்தின் மதிப்பைக் காணுதல்
மார்வாடிகளின் வணிக நிறுவனங்கள் மற்றும் வணிகக் குழுக்களில் இரண்டு முக்கியச் செயல்பாடுகள் செயல்படுத்தப்படுகிறது. அவர்கள் நீண்ட கால அடிப்படையில் மிக உற்பத்தித் திறன் வாய்ந்த நிறுவனங்கள் எங்கு உள்ளதோ அங்கே முதலீடு செய்தல் மற்றும் நுண்ணிப்பாக நிதியைக் கண்காணித்தல் ஆகிய வழிமுறைத் திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
எனினும், ஹர்ஷ் கோயங்கா மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோரின் வணிக உத்திகள் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள புதுப்புது மாற்றங்களாகும்.

2. முதலாளிகளே ஆனாலும் தொடர்ந்து கண்காணித்துக் கொள்ளல்
வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் எனில், தன்னிடம் கொடுக்கப்பட்ட பணியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில், பொருளாதார நடவடிக்கையின் கால நீட்டிப்பானது மட்டுப்படுத்த பட்டதாகிவிடும்.
தங்கள் எப்பொழுது, மாற்ற விளைவை ஏற்படுத்தும் முறையில் ஒரு செயலில் தலையிட வேண்டும் என்பதை நன்கு அறிவர். அதிக அளவில் முதலீடு செய்த தொழிலைப் பற்றி முற்றிலும் அறிந்தவராகவும் இருப்பர். இதனால் தங்களைச் சுற்றி இருக்கும் திருப்தியற்ற நிர்வாகிகளை மாற்றம் செய்வது அவர்களுக்கு எளிதாக உள்ளது. திறனற்ற நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருந்தன்மையாகத் தங்களின் நிலையிலிருந்து வெளியேறுகிறார்கள்.

3. திட்டமிடல் மற்றும் ஒரு குறிப்பிட்ட முறையைக் கையாளுதல்
நாம் சந்தேகமில்லாமல் உள்ளுணர்வோடு தெளிவான மாற்றத்தை கொண்டு வருவதே சரியான திட்டமிடல். எனினும் வணிக நிறுவனர்களின் பரிந்துரைத்த கருத்துக்களுக்காகவும் வாரிசுகளுக்காகவும் சில மாற்றங்களையும் கொண்டு வரலாம்.
4. முன்னணி விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியை இழக்கவிடாத அமைப்பு
வெற்றிகரமான தொழில் அதிபர்களைத் தங்கள் வியாபாரம் விரிவாக்கம் பெற வேண்டும் என்ற அடிப்படை குணாதிசயம் தான் இயக்கி வருகிறது. பல வடிவங்களில் விரிவாக்கம் வேண்டும் என அறிக்கைகளில் சுட்டிக் காட்டியிருப்பதைச் செயல்படுத்தவும் உறுதியாக இருக்கின்றனர்.
5. சரியான பெருநிறுவன கலாச்சாரத்தைக் கையாளுதல்
ஒரு நிறுவனம் அல்லது குழுமம் அதன் உரியச் சந்தை மற்றும் கால அளவுகளைக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் மாற்றங்கள் அல்லது திருத்தங்களைக் கொண்டு வருவது மிகவும் கடினமான பணியாக விளங்கும்.
ஒரு பெருநிறுவனத்தின் கலாச்சாரம் என்பது குறிப்பாக, திறமையான மேலாளர்கள் மற்றும் எழுச்சியூட்டும் விசுவாசிகளைக் கொண்டது. மேலும் நிதி ஊக்கங்கள் கொடுப்பதால் மட்டுமே தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும் என்பதைக் கையாளுவதும் பெருநிறுவனத்தின் கலாச்சாரம் ஆகும்.
6. பித்துகளைக் கண்டு அசர வேண்டாம்
நிர்வாகத்தின் தற்காலிக பித்துகளின் வாழ்வு காலமானது வெறும் ஆறே மாதங்களாகும். ஆகையால் இவர்களைக் கண்டு பயப்படத் தேவை இல்லை. வேலை நிறுத்தம் மற்றும் கவர்ச்சிகரமான கோட்பாடுகள் ஒரு நிறுவனத்தின் வெற்றியை ஒருபோதும் பாதிப்பதில்லை என அனுபவமிக்கவர்கள் மற்றும் வணிகப் பள்ளிகளில் உள்ள பேராசிரியர்கள் விளக்குகின்றனர்.
ஒரு பொறுப்புள்ள மேலாளர் தற்காலிக மற்றும் சோதனை முயற்சிகளாலும் தன் நிர்வாகத் திறனை அணுகுகிறார். பொதுவாக அவர், கிளர்ச்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என இரு தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்து, இரு தரப்பினருக்கும் பிரச்சனையை ஏற்படாத வகையில் சூழ்நிலையைக் கையாண்டு சரியான முடிவை எடுக்க வேண்டி உள்ளது.

7. புதிய வாய்ப்புகளைத் தவறவிடாதே
சில தொழில்கள் நமக்குப் படிப்பினைக் கற்றுக் கொடுக்கும் அனுபவ வணிகங்களாகத் திகழ்ந்திருக்கும். நிச்சயம் அதிலிருந்து நாம் நடப்பு அல்லது சூழல் பற்றிய உண்மையை அறிந்திருப்போம். உலகில் பழமையான பல குடும்பத் தொழில்கள் இருந்தன. அதில் சில வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும், ஆனாலும் நிறையத் தோல்வியைச் சந்தித்து இருக்கும் ஏனெனில் அந்தந்த காலக் கட்டத்தில் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டதாலேயே தோல்வியைத் தழுவி இருக்கும்.

வாழ்க பணமுடன் 

Money attraction workshop 

பணவளக்கலை.   #பண #ஈர்ப்பு #விதி🌹

பணக்கஷ்டம் தரும் பாடங்கள்
யாருக்கு இல்லை பணம் சம்பாதிக்கும் ஆசை? 
எல்லோரும் தான் பணம் பண்ண நினைக்கிறார்கள். ஆனால் சிலருக்கு மட்டுமே செல்வம் கொழிக்கிறது. பலருக்கு நிராசையாகத் தானே இருக்கிறது? நினைப்பது தான் நடக்கும் என்றால் எல்லாரும் பணக்காரர்கள் ஆகியிருக்க வேண்டுமே! ஏன் நம்மில் பலருக்கு பணப்பற்றாக்குறை உள்ளது? ஆழ்மனச் சக்தி, அஃபர்மேஷன், நேர்மறை சிந்தனை எல்லாம் வேலை செய்யவில்லையா பண விஷயத்தில்?
இதற்குப் பதில் சொல்வதற்கு முன் பணம் இல்லை என்று குறை சொல்பவர்களைக் கொஞ்சம் அலசலாமா?
பண பயம்
“பணம் என்ன மரத்திலயா காய்க்குது!, “ பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படணும்.” “பணம் வந்தா நிம்மதி போயிடும்”, “ நம்ம ராசி சாண் ஏறுனா முழம் சறுக்கும்”, “பண விஷயத்தில யாரையும் நம்ப முடியாது” “அளவுக்கு அதிகமா ஆசைப்படக்கூடாது”, “ஒரு செலவு போனா அடுத்த செலவு கரெக்ட்டா வந்திரும்” “நம்மளுக்கு கை கொடுக்க ஆளில்லை”, “நமக்கு இதுவே ஜாஸ்தி”, “ஒரு ஜாக்பாட் அடிச்சா எல்லாம் சரியாயிடும்” “கடனைக் கடன் வாங்கித்தான் அடைக்க வேண்டியிருக்கு” - இப்படி அதிகமாக அவர்கள் பேசும் எண்ணங்கள் என்ன என்று கூர்ந்து நோக்குங்கள். காரணம் புரியும்.
பணம் சம்பாதிக்கும் லட்சியத்தை விடப் பணம் பற்றிய பயமும் பேராசையும்தான் தவறான முடிவுகளை எடுக்கவைக்கும்.
தடால் தீர்வு
பணச்சிக்கலில் இருப்பவர்கள் பெரும்பாலும் எந்தப் பணத்தேவையையும் ஏதாவது ஒன்றைத் தடாலெனச் செய்து தீர்க்க நினைப்பார்கள். பணம் தேவையா? எங்காவது கடன் வாங்கு அல்லது அடகு வை அல்லது எதையாவது விற்று ஏற்பாடு பண்ணு. எதையாவது செய்து பணம் புரட்டு. இந்த அவசரமும், எதையும் அலசி ஆராயாமல் எடுக்கும் முடிவுக்குக் காரணமான எண்ணம்: “இதை இப்போது சமாளிக்கலாம். பிறகு வருவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!” என்பதுதான்.
இந்த எண்ணமும் செயலும் காலம் காலமாய்த் தொடரும். பிறகு இது வாழ்க்கை முறை ஆகும்.
ஒரு நண்பர் சொன்னார்: “எனக்கு வர வேண்டிய கடன் தொகை 16 லட்சம். கொடுக்க வேண்டிய கடன் 12 லட்சம் தான். ஆனால் வர வேண்டியது நேரத்துல வராததால் சொத்தை வச்சு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டிய கடனை அடைக்கிறேன்..” ரொட்டேஷன் என்பது தமிழ்ச்சொல் போலவே ஆகிவிட்டது. இது நாயர் பிடித்த புலி வால் கதைதான். முதலில் வாங்கிய கடனை அடைக்க இன்னொரு புது ஆளிடம் கடன் வாங்குவது. எந்தக் காலத்திலும் செலவும் குறையாது. கடனும் முடியாது. கடனால் மூழ்கிய குடும்பங்கள் பல எனக்குத் தெரியும்.
பணக் கண்ணோட்டம்
வரவுக்கும் மேலே செலவு செய்வது, தெரியாத தொழிலில் முதலீடு செய்வது, பணம் இல்லை என்பதற்காக எந்தச் செலவையும் குறைத்துக் கொள்ளாதது, எப்படியாவது கடன் வாங்கலாம் என்ற துணிச்சல், தவறான பொருளாதார முடிவுகள் எடுப்பது, பிறர் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது என்று ஏராளமான தவறான முடிவுகளுக்குக் காரணம் பணம் பற்றிய பிசகான எண்ணங்களே. பண ஆசை இருந்தும் பணம் பற்றிய பிழையான எண்ணங்கள் தவறான முடிவுகளையே எடுக்க வைக்கும்.
உலகின் பணம் கொழிக்கும் மக்கள் கூட்டத்தைப் பாருங்கள். அவர்கள் யூதர்களாக இருந்தாலும் சரி, மார்வாடிகளாக இருந்தாலும் சரி, செட்டியார்களாக இருந்தாலும் சரி. அவர்களுக்குப் பணம் பற்றிய சில அடிப்படையான கண்ணோட்டங்கள் உண்டு.
வேலை,தொழில் தரும் பணம்
சிக்கனம் முக்கியம். சின்ன வரவு செலவுக்கும் கணக்கு வேண்டும். உறவு என்றாலும் பண விஷயத்தில் சரியாக இருக்க வேண்டும். வீணான பகட்டுச் செலவை விடக் கையிருப்பு சொத்தே சமூக மதிப்பு. எல்லா வயதிலும் உழைக்க வேண்டும். எளிய வாழ்க்கை வாழ வேண்டும். உத்தரவாதம் தராத தொழில்களில் முதலீடுகள் கூடாது. எல்லாவற்றையும் விட “பணம் சம்பாதிப்பது மிக முக்கியம். அதைத் திறன்படச் செய்வது தான் உயர்வுக்கு வழி” என்பதை உணர்ந்தவர்கள்.
மீட்டர் வட்டி, சீட்டுக்கம்பெனி மோசடி என அனைத்துப் பொருளாதார மோசடிகளிலும் பாதிக்கப்படுபவர்கள் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். “எதையாவது செய்து சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும்” எனும் எண்ணம் தான் அவர்களைப் புதைகுழியில் தள்ளுகிறது.
நல்ல வேலையில், நல்ல தொழிலில்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று எண்ணுபவர்கள் பணத்தை எண்ணுவதை விட அதன் காரணமான வேலையையும் தொழிலையும் பற்றி அதிகம் எண்ணுவர். தொழில் மேம்படும்போது செல்வம் கொழிக்கும்.
பற்றாக்குறை மனநிலை
பிடித்ததை நம்பிக்கையுடன் செய்யும்போதும் பணம் வரும். இதுதான் உண்மை. பணம் பற்றிய பயம் இல்லாதபோது பணம் வரும். பணம் பற்றிய எண்ணத்துடன் கோபம், வெறுப்பு, பொறாமை போன்றவை உள்ளபோது செல்வம் சேராது.
பற்றாக்குறை மன நிலையில் பணத்துக்காகப் போராடுகையில் பணம் என்றும் பற்றாக்குறையாகவே இருக்கும்.
பணம் கொடுக்கும்போதும், வாங்கும்போதும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் இருங்கள். லக்ஷ்மி வரும் போது வரவேற்பது போல, போகும்போதும் வாழ்த்தி, நன்றி சொல்லி, மீண்டும் வர வேண்டும் என பிரார்த்தியுங்கள்.
பணம் தரும் பாடங்கள்
“எனக்குப் பணம் பெரிசில்லை...!” என்று பேசிவிட்டுப் பணம் இல்லை என்று புலம்பாதீர்கள். பணம் உங்கள் வாழ்க்கைத் தேவைகளை, லட்சியங்களை அடையவும் உதவுகிறது. அதை முறையாகப் பெறவும், சிறப்பாகச் சேமிக்கவும், முதலீடு செய்யவும், சரியான பொருளாதார முடிவுகள் எடுக்கவும் பணம் பற்றிய சுகாதாரமான எண்ணங்கள் வேண்டும்.
பணம் சேர வேண்டுமா? “ எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!” என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.
பணக்கஷ்டம் பற்றி அன்னியருடன் புலம்புவதை நிறுத்தி, அதன் பாடங்களை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள். பணத் தட்டுப்பாடு சில பாடங்களை உங்களுக்கு வழங்க முயல்கிறது. அந்த பாடங்களை நீங்கள் கற்கும் வரை அவை உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்!
அந்த பாடங்களை பற்றி கற்க 

Feb 5 Salem 
Feb 12 Chennai 
March 4 & 5 - 2 days money attraction @ Ooty. 

Entry fee -₹2000/- 

JC.Dr.Star Anand ram in 
பணவளக்கலை
One day workshop with in 100 days result 
Online booking - 

Thursday, 2 June 2016

எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்

எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!

எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!! 


வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் எலிப் பெட்டியைப் பயன்படுத்துவோம். ஆனால் தற்போதுள்ள எலிகளோ சாமர்த்தியமாக இருக்கிறது. எலிப் பெட்டியைக் கண்டாலே பயந்து ஓடும் எலிகள், தற்போது அதன் மேல் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனால் கடைகளில் விற்கப்படும் எலி பிஸ்கட்டுகளை வாங்கி வைக்கலாம் என்றால், வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பயமாக உள்ளது. எனவே அந்த எலிகளை இயற்கை முறையில் அழிப்பதற்கும், அதனை வராமல் செய்வதற்கும் ஒருசில வழிகள் உள்ளன. அந்த இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் எலிகள் வருவதைத் தடுக்கலாம்.

பூனை


பூனைகளை வளர்த்து வாருங்கள் உங்களுக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும் என்றால், வீட்டில் பூனைகளை வளர்த்து வாருங்கள். வீட்டில் பூனை இருந்தால், எலி வீட்டிற்குள் வரவே வராது.

புதினா


எலிகளுக்கு புதினாவின் வாசனையே பிடிக்காது. மேலும் அந்த வாசனை இருந்தாலே அவை போய்விடும். எனவே எலி பொந்து உள்ள இடத்தில் ஒரு காட்டனில் புதினா எண்ணெயை நனைத்து பொந்தினுள் வைத்தால், அதன் வாசனையை நுகரும் எலியின் நுரையீரல் சுருங்கி இறந்துவிடும்.

மனிதனின் முடி


மனிதனின் முடி உள்ள இடத்திலேயே எலிகள் நிற்காது. இதற்கு முக்கிய காரணம், எலிகள் முடியை விழுங்கிவிடும். இப்படி அவை முடியை விழுங்கினால், அவை இறந்துவிடும்.


நாப்தலின் உருண்டை


நாப்தலின் உருண்டை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே நிச்சயம் இது எலிகளுக்கும் ஆபத்தானது தான். எனவே இதனைப் பயன்படுத்தியும் எலிகளை அழிக்கலாம்.

அம்மோனியா


எலி பொந்துகளில் சிறிது அம்மோனியாவை தெளித்தால், அதன் நாற்றத்திலேயே எலிகள் இறந்துவிடும்.

மாட்டு சாணம்


எலிகளை இயற்கையாக அழிக்க வேண்டுமானால் மாட்டுச் சாணம் பயன்படுத்தலாம். அதற்கு மாட்டுச்சாணத்தினை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சீஸ் தடவி வைத்தால், அதனை எலிகள் சாப்பிட்டு, அதன் வயிற்றில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, இறந்துவிடும்.


ஆந்தை


கடைகளில் பிளாஸ்டிக்கில் விற்கப்படும் ஆந்தை பொம்மையை எலி வரும் இடத்தில் வைத்தால், எலிகள் பயந்து வராமல் இருக்கும்.

மிளகு


எலி வரும் இடத்தில் மிளகுத் தூளை தூவி விட்டால், அதனை நுகரும் போது, அதன் நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் இறந்துவிடும்.


பிரியாணி இலை


பிரியாணி இலையின் நாற்றம் எலிகளுக்கு பிடிக்காது. எனவே அந்த இலையை பொடி செய்து எலி வரும் இடத்தில் தூவி விட்டால், அதன் நாற்றத்திலேயே இறந்துவிடும்.

வெங்காயம் 

எலிகளை அழிப்பதற்கு பயன்படும் இயற்கை பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். அதற்கு வெங்காயத்தை நறுக்கி, எலி தங்கும் பொந்தில் வைத்தால், அதனை உட்கொண்டு எலிகள் அழியும்.


பேபி பவுடர் 


பேபி பவுடரை எலி தங்கும் மற்றும் வரும் இடத்தில் தூவினால், எலிகள் அந்த வாசனையால் இறக்கக்கூடும்.

பல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்!!!

பல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்!!!

பல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்!!!


வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை தரும் பெரும்பாலான பூச்சிகளை அழித்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இவை உதவினாலும், நமது வீடுகளுக்குள் பல்லிகளைக் காண்பதை நாம் விரும்புவதில்லை.

நமக்கு இவை வேண்டாத விருந்தாளிகளே. கடைகளில் காணப்படும் பல்லி விரட்டி மருந்துகள் நச்சுத்தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கு வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் மிகவும் ஆபத்தானவை. எனவே யாருக்கும் ஆபத்தை உண்டாக்காத, சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் பல்லிகளை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகளைப் பின்வருமாறு காணலாம்.

காபித்தூள் 

சிறிது காபித்தூளை மூக்குப்பொடியுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பல்குத்தும் குச்சிகளின் முனையில் இவ்வுருண்டைகளைக் குத்தி, பல்லிகள் நடமாடும் இடங்களில் அவற்றை வைக்கவும். இவற்றை உண்ணும் பல்லிகள் மடிந்துவிடும்.

நாப்தலின் உருண்டைகள் 


நாப்தலின் உருண்டைகள் சிறந்த பூச்சிக்கொல்லிகள். உங்கள் வீட்டு அலமாரிகளிலும், சிங்க்குகளிலும், கேஸ் அடுப்புக்கு அடியிலும் போட்டு வையுங்கள். பல்லிகளை விரட்டும் சிறந்த முறை இது.

மயில் இறகுகள் 


மயில் இறகுகளைப் பார்த்து பல்லிகள் பயப்படும். பல்லிகள் வசிக்கும் இடங்கள், நடமாடும் இடங்களுக்கு அருகிலுள்ள சுவர்களில் மயில் இறகை ஒட்டி வையுங்கள். பூச்சாடிகளில் மயிலிறகைப் போட்டு வையுங்கள். இதனால் உங்கள் வீட்டிலிருந்து பல்லிகள் ஓடிவிடும்.

மிளகுத் தூள், 


பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே மிளகுத் தூளை தண்ணீருடன் கலந்து கொண்டு ஒரு பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே தயாரியுங்கள். சமையலறையில் உள்ள அலமாரிகள், டியூப்லைட் இடுக்குகள், அடுப்புகளுக்கு அடிப்புறம் மற்றும் ஃப்ரிட்ஜ் அடிப்புறம் ஆகியவற்றில் இக்கலவையைத் தெளியுங்கள். இந்த வாசனையினால், எரிச்சலடைந்து பல்லிகள் ஓடிவிடும்.

குளிர்ந்த நீர்


 ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சி செய்யப்பட்ட தண்ணீரை பல்லிகள் மீது தெளியுங்கள். இதன் மூலம் பல்லியின் உடல் வெப்பநிலை குறைந்து அவற்றால் அசைய முடியாத நிலை உண்டாகும். அப்போது ஒரு அட்டைப் பெட்டிக்குள் பிடித்து அடைத்து, வீட்டிற்கு வெளியே வீசி விடுங்கள்.


வெங்காயம் 


வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டி சுவர்களில் தொங்கவிடுங்கள். பல்லிகளின் மறைவிடங்களில் போட்டு வையுங்கள். வெங்காயத்திலுள்ள கந்தக ஆவியானது பல்லிகளால் சகிக்கமுடியாத மணத்தை உண்டாக்கும். இதனால் பல்லிகள் அவ்விடத்தை விட்டு ஓடிவிடும்.

முட்டை ஓடுகள் 


முடிந்த அளவுக்கு முழுதாகக் காட்சியளிக்கும் கோழி முட்டை ஓடுகளை பல்லிகள் நடமாடும் பகுதிகளில் போட்டு வையுங்கள். வீட்டுக்குள் வேறு ஒரு பெரிய உயிரினம் இருப்பதாகக் கருதி பல்லிகள் ஓடிவிடும். முட்டை ஓடுகளை 3-4 வாரங்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்.

பூண்டு 


ஸ்ப்ரே பாட்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெங்காயச் சாறு மற்றும் தண்ணீரைக் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பூண்டுச் சாற்றினைக் கலக்கவும். நன்றாகக் குலுக்கி, இதனை வீட்டு மூலைகளிலும், விரும்பும் வேறு இடங்களிலும், தெளியுங்கள் அல்லது பூண்டுப் பற்களைக் கூட வீட்டு மூலைகளில் வைத்து பல்லிகளை விரட்டலாம்.

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி




தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல்  எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்

தேவையான பொருள்கள் :


1.நல்லெண்ணெய்


2.பூண்டு


3.மிளகு



செய்முறை:


நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத  பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்)  பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்,  2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

Sunday, 5 July 2015

வேம்பு - மருத்துவ குணங்கள்

வேம்பு - மருத்துவ குணங்கள்

1. வேப்பம்பட்டை விட்டு விட்டு வருகிற ஜீரத்திற்கு உதவுகிறது.
2. ரத்தத்தைச் சுத்திகரிக்கும் குணமிருப்பதால் குஷ்ட நோய்க்குக் கொடுக்கப்படுகிறது.
3. வயிற்றில் பூச்சித் தொந்தரவு உள்ளவர்களுக்கு இளந்தளிர்களை உப்புடனும் மிளகுடனும் அரைத்துக் கொடுக்கப்படுகிறது.
4. காமாலை நோய்க்கு வேப்பிலைச் சாற்றைத் தேனுடன் கலந்து கொடுக்கப்படுகிறது.
5. புண்களைச் சுத்தம் பட்டைக் கஷாயம் பயன்படுகிறது.
6. வேப்பிலையும், மஞ்சளையும் சேர்த்தரைத்து பற்றை அம்மைப் புண்களில் மருந்தாகப் பூசப்படுகிறது.
7. வேப்பெண்ணெய் புண்களை அகற்றுவதற்காக மேலே பூசப்படும்.
8. புத்தகங்களை அரிக்கும் பூச்சிகளை அகற்றுவதற்கு நூல் நிலையங்களில் வேப்பிலை பயன்படுகிறது.
9. வேப்பம்பூ, வாந்தி, ஏப்பம், பித்தம் ஆகியவற்றைப் போக்கும்.
10. வேப்பம் பழத்தின் ரசத்தை எடுத்து சரும வியாதியுள்ளவர்களுக்கு கொடுத்து வந்தால் நோய் தீரும்.

வீட்டுத்தோட்டம் அமைப்பது எப்படி - 2

வீட்டுத்தோட்டம் அமைப்பது எப்படி - 2

உருளை கிழங்கு


உருளைகிழங்கை பாதியாக கட் பண்ணி, கட் செய்த பகுதியை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும்...ஓரளவு முளைவிட்ட கிழங்காக இருந்தால் நல்லது. இல்லைஎன்றாலும் பரவாயில்லை.நன்றாக விளைந்ததாக இருந்தா ஒகே.

சேப்பங்கிழங்கு

சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்க வேண்டும். இதன் இலைகள் மிக பெரிதாக அகலமா பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்.

இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.மூல நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமடையும். வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில் இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும். கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால் அவசியம் வீட்டில் வளர்த்து பயன் பெறுங்கள்.

தக்காளி, மிளகாய், கத்தரி

நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும்....விதைகள் தனியே பிரியும்...பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும்...

நன்கு முற்றிய கத்தரி வாங்கி விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும்

பச்சை மிளகாய்க்கு வத்தலில் இருக்கும் விதைகளை உதிர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

விதைக்கும் முறை

விதைகள் நன்கு காய்ந்ததும் விதைக்க வேண்டியதுதான்...காய்ந்த விதைகளை முதலில் மொத்தமாக ஒரு தொட்டியில் மண்ணை லேசாக கிளறி விட்டு தூவி தண்ணீர் ஊற்றவும்...செடி முளைத்து அரை அடி உயரம் வந்ததும், வேருடன் பிடுங்கி தொட்டி/சாக்குக்கு ஒன்றாக நட்டு விட வேண்டும்...

தக்காளி காய்க்க தொடங்கியதும் கனம் தாங்காமல் செடி ஒடிய கூடும் என்பதால் செடி வைக்கும் போதே அதன் அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு விடுங்கள், காய்க்கும் சமயம் கம்புடன் இணைத்து கட்டி விட வேண்டும்.

பழுத்த பாகற்காய் விதைகளை எடுத்து நன்கு காய வைத்துக்கொள்ளவும். ஒரு தொட்டியில் ஆறு விதைகள் வரை ஊன்றலாம். முக்கியமாக இது போன்ற கொடி வகைகளுக்கு பந்தல் தேவைப்படும். அதுக்கும் சிம்பிளா ஒரு வழி இருக்கு.

பந்தல் முறை

கிணற்றில் தண்ணீர் இறைக்கும் கயிறு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும்...இரண்டு மூங்கில் கம்புகளை எடுத்து மொட்டை மாடி கை பிடி சுவரின் மேல் சாய்த்தது போல் இடைவெளி(ஒரு ஏழு அடி) விட்டு தனி தனியாக வைக்க வேண்டும்...கயிறை எடுத்து இரண்டு கம்புகளையும் இணைக்கும் விதமாய் முதலில் அகலவாக்கில் 10 இன்ச் இடைவெளியில் வரிசையாக கம்புகளை சுற்றி கட்டி கொண்டே வர வேண்டும். பின் அதே மாதிரி நீள வாக்கில் கட்ட வேண்டும்...இப்போது கட்டங்கட்டமான அமைப்பில் பந்தல் தயாராகி இருக்கும். பாகற்காய் கொடியை இதன் மேல் எடுத்து படர விட்டுட வேண்டியது தான், முடிந்தது வேலை.

கயிறுக்கு பதிலாக கட்டு கம்பிகளையும் உபயோகபடுத்தலாம்.சிறு சிறு கம்புகள் இருந்தால் குறுக்கும் நெடுக்குமாக வைத்து கட்டியும் பந்தல் போடலாம். வீட்டில் கிடைப்பதை வச்சு உங்க கற்பனையை கொஞ்சம் சேர்த்து கோங்க...அவ்வளவுதான் !

மற்றொரு பந்தல் முறை

நாலு சிமென்ட் சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக நட்டு வைத்து மூலைக்கு ஒன்றாக நாலு சாக்குகளையும் வைத்து கயிறு/கம்பிகளை கட்டியும் பந்தல் போடலாம்...இதில் கூடுதல் வசதி என்னனா இந்த பந்தலின் கீழ் விழும் நிழலில் பிற தொட்டி செடிகளை வைத்து விடலாம். மொட்டை மாடி முழு அளவிற்கும் கூட இப்படி பந்தல் போட்டு பீர்கன் , பாகை, புடலை, சுரைக்காய் போன்றவற்றை படர விடலாம்...மாடி முழுமையும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

உரம்

இரண்டு பெரிய பிளாஸ்டிக் பக்கெட் அல்லது பிளாஸ்டிக் சாக்கில் சமையலறை கழிவுகள்/காய்ந்த இலைகள் போன்றவற்றை சேகரித்து போட்டு கொண்டே வரவேண்டும்...ஒன்று நிரம்பியதும் மற்றொன்றில் போட்டு வர வேண்டும்...முதலில் போட்டு வைத்தது கொஞ்ச நாளில் மக்கியதும் அதை எடுத்து, செடிகள் இருக்கும் தொட்டியின் மணலை லேசாக கிளறி மக்கிய காய்கறி கழிவை கொஞ்சம் அள்ளி போடலாம்...மீன்,மாமிசம் கழுவிய தண்ணீரை ஒரு நாள் முழுதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் செடிக்கு விடலாம்.நன்கு வளரும். காய் கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீர் எதையும் வீணா சாக்கடைல கொட்டாம, செடிகளுக்கு ஊற்றுங்கள்...

பாத்ரூம் கழிவு நீர், துணி துவைக்கும் தண்ணீரையும் சுத்திகரித்து தொட்டி செடிகளுக்கு ஊற்றலாம்...(நேரடியாக ஊற்றக்கூடாது) சுத்திகரித்துனு சொன்னதும் என்னவோ பெரிய மேட்டர் போலன்னு நினைச்சுடாதிங்க...ரொம்ப சிம்பிள் தான்.

கழிவு நீரை சுத்திகரித்தல்

சோப்பு தண்ணீர் /கழிவு நீரில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், ஆசிட் சிலரி, டிரை சோடியம் பாஸ்பேட், யூரியா, டினோபால் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன...இதை அப்படியே செடிகளுக்கு விடுவது நல்லதல்ல...எனவே இதை ரொம்ப எளிதான வழியில் சுத்திகரிக்கலாம்...

சொந்த வீட்டில் வசிப்பவர்கள், கழிவு நீர் வெளியேறும் இடத்தில் 2 அடி நீள அகலத்துக்கு ஒரு தொட்டி மாதிரி கட்டி அதில் மண், உடைத்த செங்கல் துண்டுகள், கருங்கல் ஜல்லி போன்றவற்றை போட்டு கல்வாழை, சேப்பங்கிழங்கு போன்றவற்றை நட்டு வைக்கவேண்டும்...விரைவில் வளர்ந்து விடும்...கழிவு நீரில் இருக்கும் வேதி பொருட்களை உறிஞ்சிக்கொண்டு சுத்தமான தண்ணீரை வெளியேற்றிவிடும்...நீர் வெளியேற ஒரு சிறுகுழாய்யை தொட்டியில் வைத்துவிட்டால் போதும்...கழிவு நீர் தொட்டிலில் விழுந்த சில நிமிடங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியே வர தொடங்கும்...சிறு குழாய் வழியாக வரும் நீரை மற்றொரு தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் மொத்தமாக சேகரித்து செடிகளுக்கு ஊற்றலாம்...

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஒரு சிமென்ட் தொட்டியை கடையில் வாங்கி அதன் அடியில் துளையிட்டு சிறு குழாயை செருக வேண்டும். அவ்வளவு தான் . மற்றபடி மேலே கூறிய அதே மெதட் தான். கருங்கல் ஜல்லியில் உருவாகும் ஒருவித பாசியில் உள்ள பாக்டீரியாக்கள், குளியல் அறை நீரில் கலந்துள்ள பாஸ்பேட், சோடியம் என பல உப்புகளையும் தின்றுவிடும். சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் காய்கறிகள் நன்கு வளரும்.

ஸ்பெஷல் கேர்

விதைக்காக கடைகளை தேடி வருந்துபவர்களுக்கும் /தூரமாக இருக்கிறது யார் போய் வாங்குறது என்பவர்களுக்கும் தான் இந்த குறிப்பிட்ட வகைகளை மட்டும் கூறினேன்...மற்றவர்கள் கடைகளில் வாங்கி பயிரிடலாம்.

தரையில் கனம் கூடிய பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து நாலு பக்கமும் செங்கல்களை வரிசையாக அடுக்கி வைத்தபின் மண் போட்டு கீரை விதைகளை பரந்த நிலையில் விதைக்கலாம்...தரையில் நீர் இறங்கி விடும் என்பது போன்ற அச்சம் தேவையில்லை, ஒன்றும் ஆகாது...இப்படி செய்வதால் கீழே வீட்டிற்கு குளிர்ச்சி இலவசம் என்பது ப்ளஸ் !!

* தினமும் செடிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும், அதனுடன் பேசவும் , தடவி கொடுக்கவும் என்று அதையும் ஒரு உயிராக மதித்து பழகி வந்தோம் என்றால் நிச்சயம் நல்ல வளர்ச்சி இருக்கும்...

* பெரிய விதைகளை ஒருநாள் முன்னதாக ஊற வைக்க வேண்டும்...சாணி கிடைத்தால் அதை கரைத்து அதில் ஊறவைக்கலாம், இல்லைஎன்றால் சாதாரண தண்ணீர் போதும்.

* வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறி விடுங்கள்.

அக்கறையும், கவனமும் இருந்தால் ரசாயன வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில மெனக்கிடல்கள் அவசியமாகிறது.

நீங்க சொல்றது எல்லாம் சரிதாங்க, ஒரு பத்துநாள் ஊருக்கு போய்ட்டோம்னா செடிகள் நெலம அதோ கதிதான் , அதுக்கு என்ன சொல்ல போறீங்கன்னு கேக்குறீங்களா? கவலையே படாதிங்க அதுக்கும் கைவசம் சில செட் அப் வேலைகள் இருக்கு !! அது என்னனு அடுத்த பாகத்தில் சொல்றேன்...சரிதானா ?! அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க...

உற்சாகமான வீட்டு தோட்டத்திற்கு என் வாழ்த்துகள்...கலக்குங்க !!

நன்றி: www.kousalyaraj

வீட்டுத்தோட்டம் அமைக்க ஒரு நாள் பயிற்சி;

நண்பர்களே., எதிர்வரும் மார்ச் 15ஆம் தேதி (ஞாயிறு) காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரையிலும், அடையாறில் உள்ள விதை இயற்கை அங்காடியில், வீட்டுத்தோட்டம் அமைப்பது எப்படி? என்பது தொடர்பாக ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது.
உங்கள் வீட்டின் மாடி, அல்லது முகப்பில் இருக்கிற சிறிய இடத்தில் கூட உங்களுக்குத் தேவையான காய்கறிகளை நீங்களே விளைவித்துக்கொள்ளலாம்.