வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்

வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்
அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், நறுமணப் பொருட்கள், ஊறுகாய், பான வகைகள், இனிப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்கள் இங்கே கிடைக்கின்றன.

தொலைபேசியில் ஆர்கானிக் பொருட்கள் ஆர்டர் கொடுக்க -9790044225ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Monday, 3 March 2014

தியானத்தின் விளக்கம் & தியானம் செய்யும் முறை :

தியானத்தின் விளக்கம் & தியானம் செய்யும் முறை : 

மனதை வெறுமையாக்குவது தான் தியானம் என்று சொல்லலாம்.

மனதின் இயல்பு தொடர்ச்சியாக எண்ணங்களை உற்பத்தி செய்து கொண்டு இருப்பது.

நமது ஆழ் மனப்பதிவுகளின் பிரதிபலிப்பே இந்த எண்ண ஓட்டங்கள்.

அவை இழுத்த இழுப்பிற்கெல்லாம் நாமும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் மனம் ஒரு கருவி மட்டுமே.

மனம் நமது கால்களைப் போல் ஒரு உறுப்பு. அதனை எப்போது வேண்டுமோ அப்போது உபயோகப் படுத்த வேண்டும். நாம் எப்போதுமே கால்களை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை -

நம்முடைய சுயம் மனதை தாண்டி இருக்கிறது.

நாம் என்கின்ற சுயம் தான் எஜமான். மனம் வெறும் வேலைக்காரன் தான்.

ஆனால் எஜமான் காணாமல் போயிருப்பதால் அல்லது பலம் குன்றியிருப்பதால் வேலைக்காரனின் கொட்டம் அதிகமாகி விட்டது.

வேலைக்காரனின் கொட்டத்தை அடியோடு ஒழிப்பது தான் தியானம்.

எஜமானின் இழந்த கவுரவத்தை, பலத்தை மீட்டுவது தான் தியானம்.

வேலைக்காரனை அதட்டி கொட்டத்தை மட்டுமே அடக்குகிறோம். வேலையை விட்டு நீக்க வேண்டியதில்லை. நீக்கவும் கூடாது. அவனுடைய உதவி அவசியம் தேவை.

ஆனால் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது உதவி செய்தால் போதுமானது. எஜமான் சொல்வதை கேட்டு நடந்தால் போதுமானது.

அப்படியானால் அவனை முதலில் கட்டுப் படுத்த வேண்டும்.

எஜமான் இருப்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும்.

மனம் எப்போதும் கூச்சலிட்டுக் கொண்டு பிதற்றிக் கொண்டு திரிவதால் எஜமான் இருப்பதை கவனிப்பதே இல்லை.

எண்ண ஓட்டத்தை படிப்படியாக குறைத்தால் தான் தியானம் நிகழ்கிறது.

அதில் ஒன்று தான் எண்ணங்களை கவனித்தல்.

எண்ணங்களை கவனிப்பது தான் நம் சுயம் - விழிப்புணர்வு - எஜமான்!

வேலைக்காரனின் சேட்டைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாலே, மெதுவாக அடங்க ஆரம்பிப்பான்.

இவ்வளவு நாள் வேலைக்காரனுடன் சேர்ந்து சுற்றிய பழக்கத்தில் எஜமானுக்கு அவனை தொடர தோன்றினாலும் விருப்பு வெறுப்பின்றி அவனது நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும்.

நமது சுயம் மனதுடன் சேராமல் தனித்து விலகி நின்று பார்க்க பார்க்க மனம் எண்ண ஓட்டத்தை மெல்ல நிறுத்துகிறது.

நமது விழிப்புணர்வு இன்னும் அதிகமாக அதிகமாக மனம் வெறுமையாகிறது.

அந்த வெற்று மனதில் தான் தியானம் என்னும் அந்த அற்புதம் நிகழ்கிறது!

வெற்று மனதின் சக்தி அபாரமானது.

2. எண்ண சிருஸ்டி தியானா

நல்ல காற்றோட்டமான அறையில் உட்கார்ந்து கொள்ளுங்கள் .

உங்கள் கவனத்தை முழுவதுமாக உங்கள் எண்ணத்தின் மீது திருப்புங்கள் .

எண்ணங்களை கவனிப்பது தான் விழிப்புணர்வு -

மனதில் வரும் எண்ணங்களை தடுக்க வேண்டாம்.. உருவாகக்க வேண்டாம் .

எண்ணகளின் பின் செல்ல வேண்டாம் . எண்ணங்களை மட்டும் முழு விழிப்புணர்வுடன்

கவனித்துக் கொண்டே இருங்கள் .. உங்கள் விழிப்புணர்வு முழுமையாக இருக்கும்

பட்சத்தில் மனம் வெறுமை அடையும். வெற்று மனம் அபார சக்தி உடையது .

குறைந்தது 30 நிமிடம் செய்யுங்கள் . இனி மனம் என்ற வேலைக்காரன் உங்கள் சொல்படி

நடப்பான் .

அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை