வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்

வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்
அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், நறுமணப் பொருட்கள், ஊறுகாய், பான வகைகள், இனிப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்கள் இங்கே கிடைக்கின்றன.

தொலைபேசியில் ஆர்கானிக் பொருட்கள் ஆர்டர் கொடுக்க -9790044225ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, 19 January 2014

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:

*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது.

 *கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். 

*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது 

*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

 *சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். 

*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

 *வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

 *தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. 


*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. *ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். *கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. *ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். *ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா *ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். *திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. *வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். *நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. *கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. *வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். *அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். *துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. *செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. *கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. *சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. *கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. *முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. *கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. *குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. *பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. *முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும். *லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. *வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். *பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். *வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. *மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். *சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. *பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். *சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. *ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. *கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். *வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். *வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். *நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. *நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். *பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. *கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். *பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். *வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். *சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். *மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். *கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

yOURS 

Dr.Star Anand
ANANDHAM Nature Cure Center
Coimbatore
cell- 9790044225 

ஜலபரிஷேஸனம்

பிராமணர்கள் சாப்பிடும் முன்,"ஜலபரிஷேஸனம் என்ற முறையில் உள்ளங்கையில் சிறிது தண்ணீர் விட்டு உறிஞ்சுவதைப் பார்த்திருப்பீர்கள்.<வலக்கை ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் சேர்த்து வைத்து, மற்ற விரல்களை நீட்டி, உள்ளங்கையில் சிறிது தண்ணீர் ஊற்றி, உதட்டால் மணிக்கட்டு ரேகையில் வாய் வைத்து, மூன்று முறை உறிஞ்சிக் குடிப்பதே ஜலபரிஷேஸனம். இதற்கு காரணம் தெரியுமா!சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பொது விதி. இவ்வாறு செய்தால் ஜீரணம் கெட்டு விடும். பற்களால் உணவைச் அரைத்து சாப்பிடும்போது, சுரக்கிற <உமிழ்நீரே, உணவைக் கரைக்க போதுமானது. சாப்பிடும் முன், கை கால் கழுவி, வாய் கொப்பளிப்பதும் இதனால் தான். அதிலும் ஓரளவு தண்ணீர் வாயில் ஒட்டிக்கொள்ளும் சரி..விக்கல் வந்து விட்டது, உணவு காரமாக இருக்கிறது... அப்போது என்ன செய்ய என்ற கேள்வி எழும். இதற்கு தீர்வு, உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். விக்கல் வர காரணம் என்ன தெரியுமா?சாப்பிடும் போது வேலை, தொழில், வியாபாரம், இன்ன பிற விஷயங்களைச் சிந்திப்பது தான். எனவே, சாப்பிடும் சமயத்தில் சாப்பாட்டைப் பற்றிய சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். இதனால் தான் சாப்பிடும் முன், நாக்கு நனையுமளவு மிகக்குறைந்த அளவு தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். 


Yours 

Dr.Star Anand 
ANANDHAM NATURE CURE & YOGA CURE CENTER
COIMBATORE - 641016 
CELL -9790044225 

Monday, 6 January 2014

அறுகம்புல்

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது

சீரக தண்ணீர் செய்முறை:

சீரக தண்ணீர் செய்முறை:

குடம் (15) லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் தோராயமாக பாதி ஆறவைத்து அதில் ஒரே ஒரு டீஸ்பூன் அளவு சீரகத்தை போட்டு ஓர் குழி தட்டு போட்டு (வேர்த்து வடியும் நீர் தண்ணீரில் விழும்படியாக) முடிவைக்கவேண்டும். இந்த தண்ணீரை குடித்துவர வேண்டும். தினமும் புதியதாக செய்துக்கொள்ளவும்.

BP மற்றும் கொழுப்பு கட்டுக்குள் வரும்.

சமையலில் சீரகம் உபயோகிகின்றோமே தனியாக ஜீரக தண்ணீர் குடிக்கவேண்டுமா என்ற நியமான நினைப்பு ஏற்ப்படுவது இறக்கையே. மேற்கண்ட செயல்முறை விளக்கத்தில் சீரகம் மிதமான வெப்பத்திற்கு உட்ப்படுதப்படுவதை பார்க்கின்றோம், இதே சமையலில் பயன்படுத்தும்போது நமக்கு தேவையான மருத்துவ உட்ப்பொருள் (alkaloid) குழம்பு கொதிக்கும்போது ஆவியாகி வெளிப்பட்டுவிடும் என்பதே உண்மை. அதலால் நுணுக்கமரிந்து பயன்படுத்துவது நற்பலனளிக்கும்.

வாயு தொல்லை

பெரும்சப்தத்துடன் ஏப்பம் விடுபவர்களை காண முடிகிறது. நமக்கு அருவெறுப்பு, சிறிது கூட நாகரிகம் இல்லாமல் இப்படி பொது இடத்தில் ஏப்பம் விடுகிறாரே என்று. ஆனால் ஏப்பட்ம் விட்டவர் புத்திசாலி. ஆயுர்வேதத்தின் உபதேசங்களை நன்கு அறிந்திருக்ககக்கூடும். பெரும் சப்தத்துடன் விடுவது தவறுதான் என்றாலும் ஒரு இயற்கையான உபாதையை தடுக்காமல் ஏப்பத்தை நன்கு வெளியே விட்டுவிட்டதால் வாயுத் தொல்லைகள் அவருக்கு வராமல் தன்னை பாதுகாத்துக் கொள்கிறார். இதே நபர் வரும் ஏப்பத்தை தடுக்கக்கூடிய வழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கு கீழ்காணும் உபாதைகள் வரக்கூடும்.

1.ருசியின்மை 2. உடல்நடுக்கம்

3. ஹ்ருதயத்திலும், நெஞ்சிலும் வாயுப்பிடிப்பு

4. வாயுவினால் வயிறு பெருத்தல் 5. இருமல் 6. விக்கல்.

ஜீரகத்தை லேசாக வறுத்து (5 கிராம் அளவில்) கால் லிட்டர் தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, வெதுவெதுப்பாக சிறிய அளவில் அடிக்கடி பருக வேண்டும். ஆயுர்வேத மருந்து கடைகளில் தான் வந்திரம் குளிகை, வாயுகுளிகை என்று மாத்திரைகள் விற்கப்படுகின்றன, தான்வந்திரம் குளிகையை மேல் குறிப்பிட்ட ஜீரக ஜலத்துடன் 1 மாத்திரையை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தசமூலாரிஷ்டம் 1 அவுன்ஸ் அதாவது 25IL, 1 வாயு குளிகையுடன் காலை, இரவு -ஆஹாரத்திற்குப் பிறகு சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மருந்தை நாடாமல் இருக்க வேண்டுமாயின் ஏப்பத்தை தடுக்காமல் அதிக சத்தமில்லாமல் மெதுவாக விட்டு விடுவதே நல்லது.

நம் உடலில் புகும் தீய சக்திகளில் பெரும்பாலானாவை தண்ணீர் மூலமாகவே சேர்கின்றன. தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்து அருந்தி வந்தால் நமது எண்ணங்கள் துõய்மையாகி ஆன்மீக முன்னேற்றம் துரிதம் அடையும். தண்ணீரில் சிறிது சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தோஷங்கள் அகலும்

உடற்பயிற்சி செய்யாவிட்டால் மரணங்கள் நிகழும், ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது:-

உடற்பயிற்சி செய்யாவிட்டால் மரணங்கள் நிகழும், ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது:-

இன்று நமக்கு ஏற்படும் பெரும்பாலும் நோய்களுக்கு மிக முக்கிமான காரணம் உடற்பயிற்சியின்மையே.

நாம் உடற்பயிற்சி Regularஆக செய்தாலே நமது பல நோய்கள் காணாமல் போய்விடும்

உடற்பயிற்சி என்றால்

Cycling
Swimming
House Work / House Garden Work
Jacking / Running
Body Working
Excercise

மற்றும்

நமது உணவு முறையில் மாற்றம் வேண்டும்

கீரைகள்,
காய்கறிகள்,
பழங்கள்,
பயிறு, தானியங்கள் தினமும் அதிகம் சாப்பிட வேண்டும்

மற்றும்

Healar Baskar (ஹீளர் பாஸ்கர்) முறையில் சாப்பிட வேண்டும்
சாப்பிடும் போது
கைகால் கழுவி,
இறைவனை பிராத்தனை செய்து,
தரையில் உட்கார்ந்து,
முதலில் இனிப்பை சாப்பிட்ட பிறகு,
கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாக, வாயை மூடி, நன்றாக மாவுபோல் மென்று திண்ண வேண்டும்
அறுசுவை உணவோடு, சாப்பிடும் போது, சாப்பிடும் முன்(30 min), சாப்பிடும் பின்(30 min) தண்ணிர் குடிக்க கூடாது
ஏப்பம் வந்த பிறகு சாப்பிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்
சாப்பிடும் போது பேசக் கூடாது / போன் பேசக் கூடாது / டிவி பார்க்கக்க் கூடாது

மற்றும்

தரையில் அதிகமாக உட்கார்ந்து பழக வேண்டும்

Chair / Sofa (சோபா) – வில் உட்கார்ந்து இருப்பதை அதிகம் தவிர்க்க வேண்டும்
லண்டன்:உடற்பயிற்சி இன்மையும் புகைப்பிடித்தல் போலவே உயிருக்கு அச்சுறுத்தல் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

புகைப்பிடித்தல் மற்றும் உடல் பருமனால் ஏற்படும் மரணங்களுக்கு சமமாக உடற்பயிற்சி குறைவும் உலகெங்கும் மக்களை கொல்வதாக மருத்துவ இதழான ‘த லான்செட்டில்’ வெளியான ஆய்வு அறிக்கை கூறுகிறது.

வாரத்திற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்டவேலை செய்வது போன்ற மிதமான உடற்பயிற்சிகளை செய்தால், 50 லட்சத்துக்கும் மேலானோர் இறப்பதைத் தவிர்க்கலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இதய நோய், சர்க்கரை வியாதி, சில ரக கேன்சர் வியாதிகள் ஏற்படுவது ஆறிலிருந்து பத்து சதவீதமாகக் குறையும்.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 33 ஆராய்ச்சியாளர்கள் இணைந்த குழு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

உடற்பயிற்சியின்மை தற்பொழுது மிகப்பெரிய ஆரோக்கிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும், அரசுகள் அவசரமாக இவ்விவகாரத்தில் ஏதேனும் செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

லண்டனில் ஒலிம்பிக்ஸ் நடைபெற உள்ள சூழலில் மக்களிடம் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Urs 

Dr.Star Anand
Naturopathy Dr