வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்

வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்
அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், நறுமணப் பொருட்கள், ஊறுகாய், பான வகைகள், இனிப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்கள் இங்கே கிடைக்கின்றன.

தொலைபேசியில் ஆர்கானிக் பொருட்கள் ஆர்டர் கொடுக்க -9790044225ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, 7 November 2014

உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்ற...

உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்ற...

நண்பர்களே, உங்கள் உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்ற, தினமும் காலையில் வெறும் வயிற்றில் (காலை உணவிற்கு முன்னர்) ஒரு கப் கீழ்க்கண்ட பழச்சாற்றை அருந்தினால் போதும். இது உங்கள் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றி, உங்களை நாள் முழுக்க புத்துணர்ச்சியாக வைக்கும். முயற்சித்துப் பாருங்கள்.

புத்துணர்ச்சி ஜூஸ்
---------------------------

தேவையான பொருட்கள்.
---------------------------------------

1. ஒரு முழு எலுமிச்சை (சாறு பிழிந்தது)

2. நான்கு ஆப்பிள் (பச்சை வண்ண ஆப்பிள் சிறந்தது)

3. சிறிய அளவில் இஞ்சி

4. ஒரு கப் தண்ணீர் (தண்ணீர் சேர்த்துக் கொள்ளாமலும் அருந்தலாம்)

செய்முறை:
---------------------------

எலுமிச்சை சாறு, ஆப்பிள், இஞ்சி போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து, சிறிது தண்ணீர் அருந்தி பருகலாம். சர்க்கரை, உப்பு போன்று எதையும் சேர்க்க கூடாது. முடிந்தவரை எல்லா பொருட்களும் ஆர்கானிக் பொருட்களாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். எப்போதும் இஞ்சியின் தோலை நீக்கியே உபயோகிக்க வேண்டும்.

நன்றி: higherperspective.com

No comments:

Post a Comment