வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்

வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்
அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், நறுமணப் பொருட்கள், ஊறுகாய், பான வகைகள், இனிப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்கள் இங்கே கிடைக்கின்றன.

தொலைபேசியில் ஆர்கானிக் பொருட்கள் ஆர்டர் கொடுக்க -9790044225ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, 16 December 2014

கேழ்வரகு மாவில் புட்டு

கேழ்வரகு மாவில் புட்டு

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கேழ்வரகு மாவில் இளசுகளுக்குப் பிடிக்கும் அருமையான புட்டு செய்து சாப்பிடலாம்.



தேவையான பொருட்கள்:

raagi puttu

கேழ்வரகு(ராகி) மாவு – மூன்று கப்
உப்பு – அரை ஸ்பூன் அல்லது தேவையான அளவு
துருவிய தேங்காய் – அரை மூடி
சர்க்கரை – 1 கப்
நெய் – 1 ஸ்பூன்

செய்யும் முறை:

கேழ்வரகு மாவில் உப்பை கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும். இறுத்திப்பிடித்தால், கட்டியாகவும், சற்று அழுத்தினால் மாவாக உதிரும்படி பிசையவும்.

பிறகு, இட்லி குண்டானை அடுப்பில் வைத்து கீழே தண்ணீர் விட்டு, ஒரு இட்லி தட்டை மட்டும் வைத்து, அதில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது உதிர்த்து வைத்துள்ள மாவை தட்டுக்களில் பரப்பிவிட்டு பதினைந்திலிருந்து இருபது நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

எடுத்த உடனேயே சூட்டிலிருக்கும் போதே தேங்காய் துருவலையும் கொட்டி நன்றாக உடைத்து விடவும். சூடான சத்தான கேழ்வரகு புட்டு தயார். சாப்பிடும் பொழுது சிறிது நாட்டுச்சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து சூடாக சாப்பிடவும்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment