வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்

வீட்டுக்கே வரும் ஆர்கானிக் பொருட்கள்
அரிசி, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், நறுமணப் பொருட்கள், ஊறுகாய், பான வகைகள், இனிப்பு வகைகள் போன்ற உணவுப் பொருட்கள் இங்கே கிடைக்கின்றன.

தொலைபேசியில் ஆர்கானிக் பொருட்கள் ஆர்டர் கொடுக்க -9790044225ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, 7 December 2014

இயற்கை முறையில் வெண்மையான பற்களைப் பெற :- வேப்பங்குச்சி-

இயற்கை முறையில் வெண்மையான பற்களைப் பெற :-
வேப்பங்குச்சி-

பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகிவிடுமா என்ன? பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய மகத்துவம் உள்ளது.அதேப்போல் தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன.

இது ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி தான் தங்கள் பற்களை துலக்குகின்றனர். அதனால் தான், அவர்கள் பற்கள் இன்றும் உறுதியாக இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது. மேலும் இதனைக் கொண்டு பற்களை துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச்சென்று, துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமலும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.

கசப்பு இனிப்பாகும் விந்தை!.....

பல்லுக்கு நன்மையையும் உறுதியும் சேர்க்கும் மற்றொன்றுதான் வேம்பு!

அதன் குச்சியால் பல்துலக்கும்போது அது பற்களுக்கு உறுதி சேர்ப்பது மட்டுமல்ல சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது!..

ஆனால் அதன் கசப்புச் சுவை காரணமாக அதன் பயனை அறிந்தவர்கூடப் பயன்படுத்துவது இல்லை!

ஆனால் அதன் பயன்பாட்டில் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தினால் கசப்புச் சுவையைத் தவிர்த்து திருப்தியாகப் பல் துலக்கலாம்.

ஆதாவது நமது நாக்கின் அனைத்துப் பகுதிகளும் அனைத்துச் சுவைகளையும் உணர்வது இல்லை! ஒவ்வொரு சுவைக்குமான சுவை மொட்டுக்கள் நாக்கின் ஒவ்வொரு பாகத்திலும் அமைந்துள்ளன.

அதன்படி கசப்புச் சுவையை உணரக்கூடிய சுவை மொட்டுக்கள் வாயின் உட்பகுதியில் நாக்கின் பின்பாதியில் அமைந்துள்ளன.

நாம் கசப்பை மெல்லும்போது அந்தச் சுவை மொட்டுக்கள் மூலம் கசப்பை உணர்வதால் வேப்பங்குச்சியால் பல் துலக்குவதை வெறுக்கிறோம்.

ஆனால் அந்தக் கசப்பைச் சிறுதும் அறியாமல் வேப்பங்குச்சியால் சிறப்பாகப் பல்துலக்கலாம்.

ஒரு துண்டு வேப்பங்குச்சியை ஒடித்து அதன் நுனியை முன்பற்களால் நன்றாக மென்று மஞ்சிபோல் ஆக்கவேண்டும்.

அப்போது எந்தக் காரணத்தைக் கொண்டும் குச்சி நுனி நாக்கைத் தாண்டக் கூடாது! அதேபோல கடைவாய்ப் பற்களைப் பயன்படுத்தக் கூடாது.

ஓரிரு தடவை பிசுறுகளையும் எச்சிலையும் வெளியே துப்பி விட வேண்டும்.

இப்போது கசப்பு போயேபோச்சு என்று சொல்லிக்கொண்டே வழக்கம் போல் பல் துலக்கலாம் .

வேப்பங்குச்சி எல்லா இடங்களிலும் கிடைப்பதால் கசப்புத் தெரியாமல் பல்துலக்கப் பழகிக் கொண்டால் தினமும் அருமையாக இயற்கை முறையில் பல் துலக்கலாம்! 

No comments:

Post a Comment